களனிப்பள்ளத்தாக்கு ரயில் பாதையில் போக்குவரத்து இடையூறு

Report Print Aasim in சமூகம்

களனிப்பள்ளத்தாக்கு ரயில் பாதையில் ஏற்பட்ட போக்குவரத்து இடையூறு காரணமாக நுகேகொடை- பெங்கிரிவத்த இடையிலான போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.

கொழும்பில் பெய்த கடும் மழை காரணமாக மரமொன்று உடைந்து இன்று(13) மாலை ரயில் பாதையில் வீழ்ந்துள்ளதன் காரணமாகவே இவ்வாறு போக்குவரத்தில் இடையூறு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து ரயில் பாதையை சுத்தப்படுத்தும் நடவடிக்கைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டுள்ளன. நாளை காலையில் வழமைபோன்று ரயில் சேவைகள் இயங்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

குறித்த ரயில் போக்குவரத்து தடங்கல் காரணமாக களனிப்பள்ளத்தாக்கு ரயிலை நம்பியிருந்த அலுவலக ஊழியர்கள் பெரும் அவதிக்குள்ளாகியதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.