ஹம்பாந்தோட்டையில் மீன்பிடிப்படகு தீயில் எரிந்து நாசம்

Report Print Aasim in சமூகம்

ஹம்பாந்தோட்டை மீன்பிடித்துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மீன்பிடிப் படகொன்று தீயில் எரிந்து நாசமாகியுள்ளது.

கடந்த ஒரு மாதகாலமாக குறித்த மீன்பிடிப்படகு திருத்த வேலைகளுக்காக துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்ததாக கூறப்படுகின்றது.

இந்நிலையில் இன்று மாலை படகில் திடீரென தீப்பற்றி எரிந்து பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது. படகின் சந்தைப் பெறுமதி 90 இலட்சம் ரூபா என்று தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, சம்பவத்தின் போது படகில் இருந்த நபர் கடலில் குதித்து உயிர் தப்பியுள்ளார். தீவிபத்துக்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை.

மேலம், குறித்த சம்பவம் தொடர்பாக பொலிசார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.