வவுனியாவில் வீதியோர மரங்களால் ஆபத்து?

Report Print Theesan in சமூகம்

வவுனியா - கண்டி வீதியில் அமைந்துள்ள புதிய தனியார் பேருந்து நிலையத்திற்கு முன்பாக சாலையோரங்களில் உள்ள பட்டுப்போன மரங்கள் தற்போது வீதியோரங்களில் பயணம் செய்யும் மக்களுக்கு அபாயகரமானதாக மாறியிருப்பதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

பட்டுப்போன மரங்களின் கிளைகள் அவ்வப்போது காற்றுக்கு உடைந்து விழுந்துக் கொண்டு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, பாரிய காற்று வீசும் போது இம் மரங்களின் பெரிய கிளைகள் முறிந்து விழுமாயின் பயணம் செய்யும் மக்களுக்கு பெரும் ஆபத்தை ஏற்படுத்தும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், வவுனியாவில் தற்போது காற்றுடன் கூடிய மழை பெய்து வருகின்றது.

இவ்வாறான சூழலில் இம் மரங்கள் முறிந்து விழுவதற்கான சந்தர்ப்பம் அதிகமாக இருப்பதாக தெரிவிக்கும் மக்கள் இம் மரங்களை அகற்றுவதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டுள்ளனர்.