போலித் தங்கத்தை கொடுத்து குறிசொல்லும் பெண்ணொருவரிடம் 25 இலட்சம் மோசடி

Report Print Aasim in சமூகம்

போலித் தங்க உருண்டைகளை கொடுத்து பெண்ணொருவரிடம் இருந்து 25 இலட்சம் ரூபா மோசடி செய்யப்பட்டுள்ளதாக பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்தச் சம்பவம் காலி, ஹபராதுவைப் பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.

ஹபராதுவைப் பிரதேசத்தில் குறி சொல்லும் பெண்ணொருவரிடம் வந்த நபரொருவர், தான் வீட்டுக்கான அத்திவாரமொன்றைத் தோண்டும் போது ஒரு செம்பு நிறைய தங்க உருண்டைகள் கிடைத்துள்ளதாகவும், அதனை வைத்துக்கொண்டிருப்பதற்கு அச்சமாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

எனவே அவற்றை எடுத்துக்கொண்டு விரும்பிய தொகையொன்றை தருமாறு குறித்த நபர் குறிசொல்லும் பெண்ணிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அந்த நபரிடம் இருந்த தங்க உருண்டைகளை வாங்கிப் பரிசோதித்துப்பார்த்த ​போது உண்மையாக தங்கமாக தோன்றவே 25இலட்சம் ரூபா கொடுத்துவிட்டு அவற்றை குறிசொல்லும் பெண் பெற்றுக் கொண்டுள்ளார்.

எனினும், அவற்றை வேறொருவருக்கு விற்பனை செய்ய முயற்சித்த போது அவை அனைத்தும் தங்க முலாம் பூசப்பட்ட இரும்பு உருண்டைகள் என்பது தெரிய வந்துள்ளது.

இதனையடுத்து அவர் காலி மோசடித்தடுப்புப் பிரிவில் முறைப்பாடொன்றை மேற்கொண்டுள்ளார். சம்பவம் தொடர்பான விசாரணைகளை பொலிசார் முன்னெடுத்துள்ளனர்.