நீதிமன்ற அவமதிப்புக்குற்றச்சாட்டு! ஒக்டோபரில் ரஞ்சனுக்கு எதிரான வழக்கு விசாரணை

Report Print Aasim in சமூகம்

நீதிமன்ற அவமதிப்புக் குற்றச்சாட்டின் பேரில் பிரதியமைச்சர் ரஞ்சனுக்கு எதிரான முறைப்பாடுகளை விசாரிக்க உச்சநீதிமன்றம் தீர்மானித்துள்ளது.

நீதித்துறையில் பெரும்பாலானவர்கள் முறைகேடாக நடந்து கொள்வதாக பிரதியமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க அண்மையில் விமர்சனம் செய்திருந்ததார்.

இதன் காரணமாக அவர் நீதிமன்றத்தை அவமதித்துள்ளதாக தெரிவித்து பொதுபல சேனா அமைப்பு மற்றும் சட்டத்தரணிகள் சங்கம் என்பன தனித்தனியான முறைப்பாடுகளை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளன.

குறித்த முறைப்பாடுகளை விசாரணைக்கு ஏற்றுக் கொள்வதா என்பது குறித்து நேற்று பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது எதிர்வரும் அக்டோபர் 12ம் திகதி தொடக்கம் ரஞ்சனுக்கு எதிரான வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாக தீர்மானிக்கப்பட்டுள்ளது.