கொழும்பில் இருந்து மட்டக்களப்பு நோக்கி சென்ற புகையிரதத்தில் மோதி ஒருவர் பலி!

Report Print Kumar in சமூகம்

மட்டக்களப்பு - திராய்மடு பகுதியில் புகையிரதத்தில் மோதி ஒருவர் உயிரிழந்துள்ளதாக மட்டக்களப்பு பொலிஸார் தெரிவித்துள்ளார்.

குறித்த சம்பவம் இன்று அதிகாலை இடம்பெற்றுள்ளது. கொழும்பில் இருந்து மட்டக்களப்பு நோக்கி சென்ற புகையிரதத்தில் மோதியே இவர் உயிரிழந்துள்ளதாக மட்டக்களப்பு பொலிஸார் கூறியுள்ளனர்.

சம்பவத்தில் உயிரிழந்தவர்கள் மட்டக்களப்பு, திராய்மடு பகுதியை சேர்ந்த தங்கராஜா சதாகரன் (35வயது) என இனங்காணப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

சடலம் புகையிரத ஊழியர்களினால் அந்த புகையிரதம் மூலம் மட்டக்களப்பு புகையிரத நிலையத்திற்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளது.

மேலும், சம்பவம் தொடர்டபாக மேலதிக விசாரணைகளை மட்டக்களப்பு பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.