உயிரிழந்தவரின் சடலத்தை ஒப்படைத்து விட்டு திரும்பியவர் பலி - யாழில் நடந்த சோகம்

Report Print Vethu Vethu in சமூகம்

யாழில் இன்று ஏற்பட்ட விபத்து சம்பவம் ஒன்றில் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

ஹயஸ் வாகனம் மதிலுடன் மோதி ஏற்பட்ட விபத்தில் வாகன சாரதியான நவராசா என்பவர் உயிரிழந்துள்ளார்.

யாழ். கச்சேரிக்கு அருகாமையில் உள்ள மதுபானசாலைக்கு முன்பாக இன்று அதிகாலை 5.00 மணியளவில் இந்த விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இந்த விபத்தில் யாழ்.மணிக்கூட்டு வீதியைச் சேர்ந்த 67 வயதான நவராசா என்பவரே உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்த ஒருவரின் சடலத்தினை வேனில் கொண்டு சென்று வவுனியாவில் கொடுத்து விட்டு, மீண்டும் வீட்டிற்கு திரும்பிக் கொண்டிருந்த வேளையில் இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளது.

நித்திரைத் துாக்கத்தினால் இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக முதற்கட்ட விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது.

விபத்தில் படுகாயமடைந்த நிலையில், யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட வேளையிலேயே உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவரின் சடலம் வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. இது குறித்து பொலிஸார் விசாரணையை முன்னெடுத்து வருகின்றனர்.


you may like this video..