நாட்டின் சில பகுதிகளில் மின் விநியோகத் தடை?

Report Print Kamel Kamel in சமூகம்

தொழிற் சங்கப் போராட்டம் காரணமாக நாட்டின் சில பகுதிகளில் மின் விநியோகத் தடை ஏற்பட்டுள்ளதாக இலங்கை மின்சார ஊழியர் சங்கத்தின் செயலாளர் ரஞ்சன் ஜயலால் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் மின் விநியோகத்தினை வழமைக்கு கொண்டு வர முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கோரிக்கைகளை முன்வைத்து மின்சாரசபை ஊழியர்கள் நேற்று முதல் 48 மணித்தியால தொழிற்சங்கப் போராட்டம் ஒன்றை முன்னெடுத்து வருகின்றனர்.

அத்துடன், நாளை நண்பகலுக்கு முன்னதாக கோரிக்கைகள் நிறைவேற்றப்படாவிட்டால் காலவரையறையின்றி போராட்டம் முன்னெடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக அரசாங்கம் வாக்குறுதி அளித்துள்ள நிலையில் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.