வட்டுக்கோட்டையில் இருந்து முல்லைத்தீவு வரை என்ற அரசியல் பகுப்பாய்வு நூலின் அறிமுக நிகழ்வு

Report Print Sumi in சமூகம்

வட்டுக்கோட்டையில் இருந்து முல்லைத்தீவு வரை என்ற அரசியல் பகுப்பாய்வு விமர்சன நூலின் அறிமுக நிகழ்வு புத்தூரில் இடம்பெறவுள்ளது.

குறித்த நிகழ்வு எதிர்வரும் 17 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை பி.ப. 4 மணியளவில் புத்தூர் மேற்கில் அமைந்துள்ள கலைமதி மக்கள் மண்டபத்தில் நடைபெறவுள்ளது.

புதிய நீதி வெளியீட்டகத்தின் ஏற்பாட்டில் சி.கா.செந்திவேல் எழுதிய இந்த அரசியல் பகுப்பாய்வு விமர்சன நூலின் அறிமுக நிகழ்வு கா.செல்வம் கதிர்காமநாதன் தலைமையில் நடத்தப்படவுள்ளது.

இந்த நிகழ்வில் வரவேற்புரையை லதா உதயதீபன், நூல் அறிமுக உரையைச் சட்டத்தரணி சோ. தேவராஜா, நூல் மதிப்பீட்டு உரைகளை எழுத்தாளர் க. தணிகாசலம், த. நவதாஸன், நூலாசிரியர் பதிலுரையை சி. கா. செந்திவேல் நன்றியுரையை கி. வாகீசன் ஆற்றவுள்ளனர்.

மேலும், நிகழ்ச்சித் தொகுப்பை அ. இராஜசேகரம் மேற்கொள்ளவுள்ளார். நிகழ்வில் அனைவரும் கலந்து சிறப்பிக்குமாறு ஏற்பாட்டாளர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.