விபத்தை ஏற்படுத்திவிட்டு தப்பிச்சென்ற சாரதி கைது

Report Print Thirumal Thirumal in சமூகம்

தலவாக்கலை பகுதியில் நேற்று மாலை மஞ்சள் கடவையை கடக்க முற்பட்ட ஒருவரை வானில் மோதிவிட்டு தப்பிச்சென்ற சாரதி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த சாரதியை நேற்று இரவு தலவாக்கலை பொலிஸார் கைது செய்துள்ளதோடு சந்தேக நபரையும், வானையும் இன்றைய தினம் நுவரெலியா நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தவுள்ளதாக தலவாக்கலை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும் செய்திகள் விளம்பரத்திற்கு கீழ் தொடரும்

குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

தலவாக்கலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தலவாக்கலை, லிந்துலை நகரசபைக்கு அருகாமையில் நபர் ஒருவர் மஞ்சள் கோட்டினை கடக்க முற்பட்ட வேளையில் குறித்த வான் சாரதி அவரை மோதிவிட்டு தப்பிச்சென்றுள்ளார்.

இந்நிலையில், விபத்தில் மோதுண்ட நபர் தலத்திலேயே உயிரிழந்ததோடு குறித்த வானுடன் வானின் சாரதி தலைமறைவாகியிருந்தார்.

இதன்போது குறித்த சந்தேக நபரை லிந்துலை பகுதியில் வைத்து இரவு பொலிஸார் கைது செய்துள்ளதோடு, சம்பவத்தில் உயிரிழந்தவரின் சடலம் பிரேத பரிசோதனைகளின் பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படும் என பொலிஸார் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

advertisement