புலமைப்பரிசில் பரீட்சையில் தோற்றவுள்ள பாடசாலை மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு

Report Print Theesan in சமூகம்

2018 ஆம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையில் தோற்றவுள்ள பாடசாலை மாணவர்களுக்கு கற்றல் வழிகாட்டல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு கிளிநொச்சியில் இடம்பெற்றுள்ளது.

குறித்த நிகழ்வு நேற்று மாலை 3 மணியளவில் கிளிநொச்சி கூட்டுறவு மண்டபத்தில் வவுனியா இறம்பைக்குளம் ஈஷி பூரண சுவிஷேச சபையின் பிஷப் இராஜசிங்கம் தலைமையில் நடைபெற்றுள்ளது.

இந்த நிகழ்வில் கிளிநொச்சி மாவட்டத்திலுள்ள தரம் ஐந்து 2018 ஆம் ஆண்டு புலமைப்பரீட்சையில் தோற்றவுள்ள 302 மாணவர்களைத் தெரிவு செய்து அவர்களுக்கு புலமைப்பரிசில் கற்றல் வழிகாட்டல் உபகரணங்கள் இலவசமாக வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

இதன்போது கிளி. முல்லைத்தீவு பிராந்திய பிரதிப் பொலிஸ்மா அதிபர் மகேஸ் வெலிகன்ன, அகபே (ஈ.பி.எம்) திருச்சபையின் ஆயர் அலன்நீல் மற்றும் அவருடன் வருகை தந்த சிரேஷ்ட போதகர்களும் அமெரிக்கா ஊழியர்கள் குழுவினர்களும் கலந்து கொண்டு மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்களை வழங்கி வைத்துள்ளனர்.

மேலும், நிகழ்வில் ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள், போதகர்கள் என பலரும் கலந்து கொண்டுள்ளனர்.