கிளிநொச்சியில் விஞ்ஞான முறையில் கசிப்புக் காய்ச்சிய பெண்!

Report Print Suman Suman in சமூகம்

கிளிநொச்சி - திருநகர் வடக்கு பகுதியில் சட்டவிரோதமான முறையில் கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்ட பெண் ஒருவரை மதுவரி திணைக்களத்தினர் கைது செய்துள்ளனர்.

தமக்கு கிடைக்கப்பெற்ற இரசிய தகவலையடுத்து நேற்று பிற்பகல் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது குறித்த பெண்ணை கைது செய்துள்ளதாக கிளிநொச்சி மாவட்ட உதவி மதுவரி பொறுப்பதிகாரி தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், கைது செய்யப்பட்டுள்ள சந்தேகநபரை நீதிமன்றில் முன்னிலைப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை எடுத்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, 2017ஆம் ஆண்டின் இது வரையான காலப்பகுதியில் சட்டவிரோதமான முறையில் கசிப்பு உற்பத்தி மற்றும் கஞ்சா போதைப்பொருள் வைத்திருந்த குற்றத்திற்காக 426 பேர் வரையில் கைது செய்யப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.