மட்டக்களப்பு மாவட்டச் செயலாளரிடம் வெற்றிக் கிண்ணங்கள் வழங்கி வைப்பு

Report Print Rusath in சமூகம்

மட்டக்களப்பு மாவட்ட செலயக கிரிக்கெட் அணியினர் மாவட்ட அரசாங்க அதிபர் பி.எஸ்.எம்.சார்ள்ஸிடம் வெற்றிக் கிண்ணங்களை கையளித்துள்ளனர்.

குறித்த நிகழ்வு நேற்று இடம்பெற்றுள்ளதுடன், 13 ஆவது தடவையாகவும் தொடர்ச்சியாக மட்டக்களப்பு மாவட்ட செலயக கிரிக்கெட் அணி வெற்றியை பெற்றுக்கொண்டுள்ளது.

கடந்த 09 ஆம் திகதி இளைஞர் கழக சம்மேளனத்தினால் நடத்தப்பட்ட அரச மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களுக்கிடையிலான கிரிக்கெட் சுற்றுப் போட்டியில் மட்டக்களப்பு மாவட்ட செயலக அணி முதலாம் இடம் பெற்று கிண்ணத்தை சுவீகரித்து கொண்டுள்ளது.

மண்முனை தென் மேற்கு பிரதேச செயலாளர் வெற்றிக்கிண்ணத்துக்காக கடந்த 20 ஆம் திகதி நடத்தப்பட்ட கிரிக்கெட் சுற்றுப் போட்டியில் மாவட்ட செயலக கிரிக்கெட் அணியினர் முதலிடம் பெற்றிருந்தனர்.

இந்த இரண்டு கிண்ணங்களும் மாவட்டச் செயலாளரிடம் அணித்தலைவர் அ.சுதர்சனினால் மாவட்ட செயலகத்தில் வைத்து கையளிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட செயலக கிரிக்கெட் அணியில், அணித்தலைவர் அ.சுதர்சன், உப தலைவர் என்.சிறிதரன், ரி.ராஜ்குமார், என்.ஜெயக்குமார், வி.அனந்தராஜேஸ் கண்ணா, வை.ஜெயராஜா, ஐ.தினேஸ்குமார், வி.பொய்சன், ஏ.கிருசாந்தலிங்கம், கே.சூரியகுமார், ஆர்.சிவநாதன், ஏ.ஏ.எல்.ஜபார் அகமட், ப.புஸ்பராஜா, எஸ்.ஜெகான், வி.வசந்தராஜா, ஜே.சசிகரன், ஏ.எல்.எம்.அனிஸ், என்.எம்.மர்சூன் என பலரும் கலந்து கொண்டுள்ளனர்.