சமூக விஞ்ஞான போட்டியில் முதலாம் இடத்தை பெற்றுக்கொண்ட மட்டக்களப்பு மாணவன்

Report Print Rusath in சமூகம்

மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்திற்கு உட்பட்ட கொல்லநுலை விவேகானந்த வித்தியாலய மாணவன் ஒருவர் சமூக விஞ்ஞான போட்டியில் முதலாம் இடத்தை பெற்றுள்ளார்.

குறித்த பாடசாலையில் கல்வி பயிலும் ப.ரிசாந்தன் என்ற மாணவன் சமூக விஞ்ஞான போட்டியில் கிழக்கு மாகாண மட்டத்தில் முதலிடத்தை தனதாக்கி கொண்டுள்ளார்.

கடந்த முப்பது வருட யுத்தத்தில் வெகுவாக பாதிக்கப்பட்ட பிரதேசத்தில், இந்த பாடசாலை அமைந்துள்ளது.

கல்வியில் தற்போது வளர்ச்சியடைந்து வருகின்ற நிலையில், கடந்த காலங்களில் விளையாட்டுப் போட்டிகளில் தேசிய மட்டத்தில் இந்த பாடசாலை மாணவர்கள் திறமைகளை வெளிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.