கிளிநொச்சி, சிவபாதகலையகம் பாடசாலைக்கென ஒதுக்கப்பட்ட நிதிக்கு என்ன ஆனது?

Report Print Suman Suman in சமூகம்

கிளிநொச்சி, சிவபாதகலையகம் பாடசாலைக்கு சிறுவர் பூங்கா அமைப்பதற்கென இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரனால் ஒதுக்கப்பட்ட 4 இலட்சம் பணத்திற்கு என்ன ஆனது என பாடசாலை சமூகம் கேள்வி எழுப்பியுள்ளது.

பாடசாலையின் வளப்பற்றாக்குறை தொடர்பில் ஊடகங்களில் பரவலாக செய்திகள் வெளிவந்த நிலையில் குறித்த பாடசாலைக்கு விஜயம் மேற்கொண்ட இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் தனது நாடாளுமன்ற உறுப்பினர் நிதியிலிருந்து சிறுவர் பூங்கா அமைப்பதற்கு 4 இலட்சம் ரூபா நிதி ஒதுக்கியிருந்தார்.

குறித்த நிதி கரைச்சி பிரதேச செயலகம் ஊடாக செலவு செய்யப்பட்டது, எனினும் குறித்த பணத்தில் அமைக்கப்பட்ட சிறுவர் பூங்கா முழுமைப்படுத்தப்படாத நிலையில் காணப்படுவதாக பாடசாலை சமூகத்தினர் தெரிவித்துள்ளனர்.

பாடசாலையின் வளர்ச்சிக்கு எவரும் உதவ முன்வராத நிலையில் இவ்வாறு ஒதுக்கப்பட்ட நிதிக்கு என்ன ஆனது? என பாடசாலையைச் சார்ந்தோர் கேள்வி எழுப்பியுள்ளதோடு, பாடசாலையில் தொடரும் வளப்பற்றாக்குறைகளை நிவர்த்தி செய்ய அரசியல்வாதிகளும், அதிகாரிகளும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.