2017 ஆம் ஆண்டிற்கான புவியியல் கண்காட்சி நிகழ்வு

Report Print Gokulan Gokulan in சமூகம்

ஜியோ மெக்ஸ் 2017 ஆம் ஆண்டிற்கான புவியியல் கண்காட்சி நோட்டன் கணபதி தமிழ் மகா வித்தியாலயத்தில் இடம்பெறவுள்ளது.

குறித்த நிகழ்வு வித்தியாலய அதிபர் சிவானந்தராஜா தலைமையில் நாளை மற்றும் நாளை மறுதினம் நடைபெறவுள்ளது.

மேலும் செய்திகள் விளம்பரத்திற்கு கீழ் தொடரும்

இந்த நிகழ்வில் ஹட்டன் கல்வி வலய பணிப்பாளர் பி.சிரிதரன் பிரதம அதிதியாக கலந்து கொள்ளவுள்ளார்.

மாணவர்களின் புவியியல் பாட அறிவை மேம்படுத்தும் நோக்கில் நடத்தப்படும் கண்காட்சி நிகழ்வில் மாணவர்களுக்கிடையிலான சித்திர போட்டி, பேச்சுப்போட்டி மற்றும் வினாவிடை போட்டிகளும் இடம்பெறவுள்ளன.

மேலும், போட்டியில் அயல் பாடசாலை மாணவர்கள் கலந்து கொள்ளவுள்ளதுடன், வெற்றி பெறும் மாணவர்களுக்கு சான்றிதழ்களும், பரிசில்களும் வழங்கப்படவுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

advertisement