நண்பர்களுக்கு இடையில் மோதல்! மனைவியின் சடலம் மரத்திலிருந்து மீட்பு

Report Print Steephen Steephen in சமூகம்

புத்தளம், ஆராச்சிக்கட்டு - பத்துலுஓயா பிரதேசத்தில் வர்த்தகர் ஒருவர் தனது நண்பரை வாளால் வெட்டி தாக்கியதில் படுகாயமடைந்துள்ளார்.

இந்நிலையில், தாக்குதல் நடத்திய வர்த்தகரின் மனைவியின் சடலம் வீட்டுக்கு அருகில் மரம் ஒன்றில் தொங்கிக்கொண்டிருந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளது.

சடலமாக மீட்கப்பட்ட பெண் 37 வயதானவர் எனவும், அவர் ஒரு பிள்ளையின் தாய் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வர்த்தகரின் வீட்டுக்கு அயல் வீட்டில் வசிக்கும் 28 வயதான நபரே படுகாயமடைந்த நிலையில், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சிலாபம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட அந்த நபரின் உடல் நிலை கவலைக்கிடமாக இருப்பதால், கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

வர்த்தகர் வேலை ஒன்றுக்காக வீட்டில் இருந்து புறப்பட்டுச் சென்றுள்ளதுடன், இடையில் வாகனத்தை நிறுத்தி விட்டு வீட்டுக்கு வந்துள்ளார்.

வீட்டுக்கு வந்த அவர் தனது நண்பனான 28 வயதான நபரும் 37 வயதான தனது மனைவியும் ஒன்றாக இருப்பதை கண்டுள்ளார். இதனால், ஆத்திரமடைந்த வர்த்தகர் நண்பனை வாளால் வெட்டியுள்ளார்.

வர்த்தகரின் மனைவிக்கும் அவரது நண்பருக்கும் தவறான மறைமுக தொடர்பு இருந்து வந்திருக்கலாம் எனவும், இதுவே தாக்குதலுக்கு காரணமாக இருக்கலாம் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவத்திற்கு பின்னர் 37 வயதான வர்த்தகரின் மனைவியின் சடலம் மரத்திரல் தொங்கி கொண்டிருந்த நிலையில் காணப்பட்டுள்ளது. சந்தேகநபர் மனைவியை தூக்கில் தொங்கவிட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.