சிறுமியை துஷ்பிரயோகம் செய்த நபர் கைது

Report Print Steephen Steephen in சமூகம்

பாடசாலை மாணவியான 15 வயது சிறுமியை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தி, கர்ப்பமடைய செய்த ஒருவரை பொலன்னறுவை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

சிறுமியின் தாயார் இரண்டாவதாக திருமணம் செய்து கொண்ட 52 வயதான நபரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபர் பொலன்னறுவை, போகஹா வீதி பகுதியை சேர்ந்தவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பாடசாலை மாணவி சுகவீனம் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு மேற்கொள்ளப்பட்ட மருத்துவப் பரிசோதனையில் அவர் 5 மாத கர்ப்பிணி என தெரியவந்துள்ளது.

மேலும், சிறுமி தனக்கு நேர்ந்த சம்பவம் குறித்து தாயாருக்கு தெரியப்படுத்தியிருக்கவில்லை என கூறப்படுகிறது.

இந்த நிலையில், கைதுசெய்யப்பட்ட நபர் எதிர்வரும் 20 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.