ஜெனிவா விசேட பிரதிநிதி ஒருவர் இலங்கை வருகிறார்

Report Print Steephen Steephen in சமூகம்

ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் உண்மை, நியாயம், இழப்பீடு சம்பந்தமான விசேட பிரதிநிதியான பெபலோ டி. கிரைஃப், இலங்கை அரசாங்கத்திற்கு விசேட பாராட்டுக்களை தெரிவித்து, ஜெனிவா மனித உரிமை பேரவையின் 36 வது கூட்டத் தொடரில் உரையாற்றியுள்ளார்.

தன்னை இலங்கைக்கு விஜயம் செய்யுமாறு இலங்கை அரசாங்கம் அழைப்பு விடுத்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

அழைப்பையிட்டு மகிழ்ச்சியடைவதாகவும் உத்தியோகபூர்வ விஜயமாக எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 10ஆம் திகதி இலங்கை செல்ல உள்ளதாகவும் 10ஆம் திகதி முதல் 23ஆம் திகதி வரை இலங்கையில் தங்கியிருந்து பணிகளை மேற்கொள்ள உள்ளதாகவும் பெபலோ டி. கிரைஃப் குறிப்பிட்டுள்ளார்.