கொழும்பில் தமிழர்கள் செறிந்து வாழும் பகுதியில் வெள்ள நீர்! அமைச்சரின் வழிகாட்டலுக்கு அமைய நடவடிக்கை

Report Print Murali Murali in சமூகம்

கொழும்பில், நேற்று பெய்த அடைமழை காரணமாக தமிழர்கள் செறிந்து வாழும் மட்டக்குளி - மோதரை பகுதியில் வீடுகளில் வெள்ளநீர் புகுந்துள்ளது.

இதனையடுத்து, அமைச்சர் மனோகணேசனின் வழிகாட்டலுக்கு அமைய கொழும்பு மாநாகர சபையின் முன்னாள் உறுப்பினர் மகேஸ்வரன் நேரில் சென்று நடவடிக்கை எடுத்திருந்தார்.

மேலும் செய்திகள் விளம்பரத்திற்கு கீழ் தொடரும்

குறித்த பகுதியானது, அண்மையில் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்த ஒரு இடமாகும்.

அந்த பகுதிக்கு பின்புறமாக பாரிய கட்டடம் ஒன்று நிர்மாணிக்கப்பட்ட நிலையில், குறித்த விடயம் அமைச்சர் மனோகணேசனின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டிருந்தது.

இதனையடுத்து உரிய நடவடிக்கை எடுத்திருந்த அமைச்சர் மனோகணேசன், குறித்த கட்டடத்தை அந்த பகுதியில் இருந்து அகற்றுவதற்கான நடவடிக்கை எடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

advertisement