நுவரெலியா மாவட்ட செயலாளருக்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்ட தனி நபர்

Report Print Gokulan Gokulan in சமூகம்

நுவரெலியா மாவட்ட செயலாளருக்கு எதிராக தனிநபர் ஒருவரினால் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

குறித்த ஆர்ப்பாட்டம் இன்று காலை முதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. நுவரெலியா பகுதியை சேர்ந்த பிரதீப் கமால் என்பரே மாவட்ட செயலக வளாகத்தில் இவ்வாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.

ஆர்பாட்டம் தொடர்பில் பிரதீப் கமால் தெரிவிக்கையில்,

நுவரெலியா மாவட்ட செயலாளர் எலன் மீகஸ்முள்ள தனது அதிகாரத்தை துஸ்பிரயோகம் செய்துள்ளார்.

அத்துடன், ஊழல் மோசடியிலும் ஈடுபட்டுள்ளார். இவ்வாறான நிலையில் அவருக்கு கலால் திணைக்கள ஆணையாளர் பதவியை வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.

எனவே பதவியை துஸ்பிரயோகம் செய்தவருக்கு உயர் பதவியை வழங்க கூடாது என்பதை வெளிப்படுத்தவே இந்த கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தை முன்னெடுப்பதாகவும், வேறு ஒருவருக்கு கலால் திணைக்கள ஆணையாளர் பதவியை வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்ட பிரதீப் கமால் குறிப்பிட்டுள்ளார்.