தேசிய பரா ஒலிம்பிக் குழுவின் செயற்பாடுகள் தொடர்பில் தெளிவுபடுத்தும் கூட்டம்

Report Print Navoj in சமூகம்

கிழக்கு மாகாண சமூகசேவைத் திணைக்கள பணிப்பாளர் எம்.சி.அன்சார் தலைமையில் தேசிய பரா ஒலிம்பிக் குழுவின் செயற்பாடுகள் தொடர்பில் தெளிவுபடுத்தும் கூட்டமொன்று நடைபெற்றுள்ளது.

குறித்த கூட்டம் இன்று மட்டக்களப்பு - சந்துருக்கொண்டானில் அமைந்துள்ள சர்வோதய மண்டபத்தில் நடைபெற்றுள்ளது.

இதன்போது கமிட் நிறுவன திட்டப் பணிப்பாளர் கந்தவேள் காண்டீபன் மட்டக்களப்பு மாவட்ட மாற்றுத்திறனாளிகள் தொடர்பில் ஆற்றிய சேவைக்காக நினைவுச் சின்னமொன்று வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளார்.

குறித்த நினைவுச் சின்னம் தேசிய பரா ஒலிம்பிக் குழுவின் தலைவர் சட்டத்தரணி யூ.ஆர்.ரொட்ரிகோவால் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

இந்த நிகழ்வில் தேசிய பரா ஒலிம்பிக் குழவின் தலைவர் சட்டத்தரணி யூ.ஆர்.ரொற்றிகோ, நிதிமுகாமை மற்றும் இயலுமை தொடர்பில் பணியாற்றி வருகின்ற பிரியந்த பீரிஸ் உட்பட பலரும் கலந்து கொண்டிருந்தனர்.