போகம்பரை சிறைச்சாலையில் உண்ணாவிரதப் போராட்டத்தில் மரண தண்டனைக் கைதிகள்

Report Print Aasim in சமூகம்

கண்டி - போகம்பரை சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள மரண தண்டனைக் கைதிகள் உண்ணாவிரதப் போராட்டமொன்றை முன்னெடுத்துள்ளனர்.

இலங்கையின் பல்வேறு நீதிமன்றங்களினாலும் மரண தண்டனை மற்றும் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட பெரும்பாலான கைதிகள் கண்டி, போகம்பரை சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

சிறிய விடயங்களுக்காகவும் சிறைக்காவலர்கள் தாக்குதல் தொடுக்கப்படுவதாகவும், உணவு மற்றும் ஏனைய நலன்புரி விடயங்களில் பாரிய குறைபாடுகள் காணப்படுவதாகவும் சிறைக்கைதிகள் தெரிவித்துள்ளனர்.

அத்துடன் ஏழு வருடங்களுக்கு ஒருதடவை மேற்கொள்ளப்பட வேண்டிய சிறைக்கைதிகள் நன்னடத்தை சோதனை மிக நீண்ட காலமாக மேற்கொள்ளப்படவில்லை என்றும் தெரிய வந்துள்ளது.

இந்த நிலையில் மேற்கண்ட விடயங்களை உரிய முறையில் கவனத்தில் கொள்ளுமாறு வலியுறுத்தும் வகையில் போகம்பரை சிறைச்சாலையில் உள்ள மரண தண்டனை விதிக்கப்பட்ட மற்றும் ஆயுள் தண்டனைக் கைதிகள் உண்ணாவிரதப் போராட்டத்தில் குதித்துள்ளனர்.