சிறந்த ஏற்றுமதியாளர்களுக்கான ஜனாதிபதி விருது வழங்கும் நிகழ்வு

Report Print Evlina in சமூகம்

சிறந்த ஏற்றுமதியாளர்களுக்கான ஜனாதிபதி விருது வழங்கும் நிகழ்வு கொழும்பு, பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றுள்ளது.

குறித்த நிகழ்வு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இன்று முற்பகல் நடைபெற்றள்ளது.

மேலும் செய்திகள் விளம்பரத்திற்கு கீழ் தொடரும்

இதன்போது 2016 ஆம் ஆண்டில் இலங்கையில் ஏற்றுமதி துறையில் சிறப்பான திறமைகளை வெளிக்காட்டியவர்களுக்கு விருது வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளனர்.

ஏற்றுமதிக்கான சிறந்த பொதி செய்யும் சேவையை வழங்கியவர் உட்பட 10 விசேட விருதுகள், ஏற்றுமதியில் சிறந்து விளங்கிய பெண் தொழில் அதிபருக்கான ஜனாதிபதி விருது உட்பட 11 விருதுகளும், பொருள் மற்றும் சேவை ஏற்றுமதியில் வகைப்படுத்தலின் கீழ் 48 விருதுகள் உள்ளிட்ட 59 விருதுகளும் இதன்போது வழங்கி வைக்கப்பட்டன.

இதேவேளை இந்த நிகழ்வில் அமைச்சர்களான மஹிந்த அமரவீர,மலிக் சமரவிக்ரம, பிரதி அமைச்சர் ஹர்ஷ டி சில்வா மற்றும் இராஜாங்க அமைச்சர் எரான் விக்ரமரத்ன உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டுள்ளனர்.

advertisement