ஒரு வருடமாக இலங்கையில் இருந்த ஜெர்மன் பிரஜை மரணம்

Report Print Shalini in சமூகம்

காலி - கொஸ்கொடை கடலில் மூழ்கி ஜெர்மன் பிரஜை ஒருவர் உயிரிழந்துள்ளார்.

கடந்த செப்டம்பர் 31ஆம் திகதி இலங்கைக்கு வந்த இவர், இதுருவ பகுதியில் விடுதி ஒன்றில் தங்கி இருந்துள்ளார்.

சுமார் ஒரு வருட காலமாக இவர் இலங்கையில் தங்கியிருந்துள்ளார்.

இவ்வாறு உயிரிழந்தவர் சுமார் 45 - 50 வயதுக்கு உட்பட்டவராக இருக்கலாம் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இறந்தவரின் உடல் பிரேதபரிசோதனைக்காக எம்பிலிப்பிட்டிய வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.