முல்லைத்தீவில் மூன்று டிப்பர் வாகனங்கள் விபத்து: ஒருவர் படுகாயம்

Report Print Yathu in சமூகம்

முல்லைத்தீவில் இருந்து பரந்தன் நோக்கி மணல் ஏற்றிச் சென்ற மூன்று டிப்பர் வாகனங்கள் விபத்துக்குள்ளானதில் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.

குறித்த விபத்து இன்று அதிகாலை 4.20 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

இதன்போது டிப்பர் வாகனத்தின் சாரதி ஒருவர் படுகாயமடைந்துள்ளதாகவும், இரண்டு டிப்பர் வாகனங்கள் சேதமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

முல்லைத்தீவு ஏ - 35 வீதியில் மணல் ஏற்றிச்சென்ற மூன்று டிப்பர் வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதியதால் இந்த விபத்து நேர்ந்துள்ளது.

பரந்தன் நகருக்கு அண்மித்த பகுதியில் பொலிஸார் டிப்பர் வாகனங்களை வழிமறித்து சோதனையிட்டபோது, பின்னால் வந்துகொண்டிருந்த இரண்டு டிப்பர் வாகனங்களும் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த டிப்பர் வாகனத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானது.

குறித்த, விபத்து தொடர்பான விசாரணைகளை கிளிநொச்சி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.