தவறான தொடர்பால் ஏற்பட்ட தகராறு! பெண் ஒருவர் வெட்டிக்கொலை

Report Print Steephen Steephen in சமூகம்

கரன்தெனிய – ஊரகஸ் சந்தி, கோரகீன பிரதேசத்தில் பெண்ணொருவர் கூரிய ஆயுதத்தினால் தாக்கி கொலை செய்யப்பட்டுள்ளார்.

நேற்று இரவு நடைபெற்ற இந்த சம்பவத்தில் மற்றுமொரு பெண் படுகாயமடைந்துள்ளார்.

குறித்த பெண்ணுக்கு ஆண் ஒருவருடன் இருந்த தவறான தொடர்பு காரணமாக ஏற்பட்ட தகராறில் இந்த கொலை நடந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பெண்ணின் வீட்டுக்கு சென்ற சந்தேகநபர் அவரை வாளால் வெட்டியுள்ளார். குறித்த பெண்ணை காப்பாற்ற வந்த தாயையும் சந்தேகநபர் தாக்கியுள்ளார்.

சம்பவத்தில் வாள் வெட்டுக்கு இலக்காகிய 39 வயதான பெண் உயிரிழந்துள்ளதுடன், அவரது தாய் காயமடைந்துள்ளார்.

கொலை செய்த நபர் பிரதேசத்தில் இருந்து தப்பிச் சென்றுள்ளார். அவரை கைது செய்ய ஊரகஸ் சந்தி பொலிஸார் விசாரணைகள மேற்கொண்டுள்ளனர்.