வவுனியாவில் தூய சதா சகாய மாதாவின் வருடாந்த திருவிழா

Report Print Theesan in சமூகம்

வவுனியா - சகாயமாதாபுரம் பகுதியிலுள்ள தூய சதா சகாய மாதாவின் வருடாந்த திருவிழா திருப்பலி வழிபாடுகள் இடம்பெற்றுள்ளன.

குறித்த நிகழ்வு இன்று காலை 7 மணியளவில் நடைபெற்றுள்ளது. இதன்போது பங்குத்தந்தை எஸ். சத்தியராஜ் தலைமையில் கூட்டுத் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டுள்ளது.

கடந்த ஞாயிற்றுக்கிழமை கொடி ஏற்றத்துடன் ஆரம்பமாகிய திருவிழாவில் தொடர்ந்தும் மூன்று தினங்களாக நவநாள் வழிபாடுகள் இடம்பெற்றுள்ளன.

இதனை தொடர்ந்து சகாய மாதாபுரம் வழியாக தூய சதா சகாய மாதாவின் திருச்சொரூபம் பவனி நடைபெற்று மாதாவின் ஆசீர்வாதத்துடன் நிறைவுபெற்றுள்ளது.