வவுனியாவில் மரக்கன்று வழங்கி வைப்பும் மரநடுகையும்

Report Print Thileepan Thileepan in சமூகம்

தேசிய உணவு உற்பத்தி வாரத்தை முன்னிட்டு அரச உத்தியோகத்தர்களுக்கு மரக்கன்று வழங்கும் நிகழ்வும் மற்றும் மரநடுகை நிகழ்வும் வவுனியாவில் இடம்பெற்றுள்ளது.

குறத்த நிகழ்வு வவுனியா மாவட்ட செயலகத்தில் மாவட்ட பிரதி மாகாண பணிப்பாளர் த.யோகேஸ்வரன் தலைமையில் இன்று நடைபெற்றுள்ளது.

இந்த நிகழ்வின் போது மாவட்ட செயலாளர் ரோஹண புஸ்பகுமாரவினால் மரக்கன்று நாட்டப்பட்டதுடன், உத்தியோகத்தர்களிற்கான மரக்கன்றும் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

அத்துடன், மாவட்ட செயலக வளாகத்திலும் பயன்தரும் மரங்கள் நடும் செயற்திட்டமும் முன்னெடுக்கப்பட்டிருந்தது. கடந்த 6ஆம் திகதி ஆரம்பித்து வைக்கப்பட்ட தேசிய உணவு உற்பத்தி வாரம் 12ஆம் திகதி நிறைவடையும் நிலையில் இந்த நிகழ்வு நடத்தப்பட்டுள்ளது.

இதில் மாவட்ட செயலாளர் ரோஹண புஸ்பகுமார, வவுனியா மாவட்ட பிரதி மாகாண பணிப்பாளர் த.யோகேஸ்வரன், விவசாய பண்னை முகாமையாளர் நிரஞ்சன் மற்றும் அரச உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.