யாழ். நகரில் ஏற்பட்டுள்ள அச்சுறுத்தல்! அவசர நடவடிக்கைகளுக்கு உத்தரவு

Report Print Murali Murali in சமூகம்

யாழ். பேருந்து நிலைய சுற்றுப் புறத்தில் உள்ள 19 கிணறுகளில் இருந்து “ஆன்ஃபுல்லன்ஸ் ஸ்டீவன்சே” என அடையாளப்படுத்தப்பட்டுள்ள புதிய வகையான மலேரியா நுளம்புகள் இணங்காணப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்நிலையில், அந்த நுளம்புகள் பரவுவதை கட்டுப்படுத்துவதற்கான அவசர நடவடிக்கைகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக மாவட்ட சுகாதார அதிகாரி க.நந்தகுமார் தெரிவித்துள்ளார்.

யாழ். நகரில் அடையாளம் காணப்பட்டு நுளம்புகளை ஆய்வுக்கு உட்படுத்திய போது அவை இந்தியாவில் அதிகம் காணப்படும் “ஆன்ஃபுல்லன்ஸ் ஸ்டீவன்சே” என்ற வகையை சேர்ந்த மலேரியா நுளம்பு என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், குறித்த நுளம்புகள் காணப்படும் கிணறுகளில், பாவனைகளில் உள்ள கிணறுகளுக்கு மீன் குஞ்சிகளை விடுவதற்கும், பாவனையில் இல்லாத கிணறுகளுக்கு மருந்து தெளிப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.