புகையிரத சாரதிகள் திடீர் பணிநிறுத்தம் : பெரும் சிக்கலில் பயணிகள்

Report Print Thirumal Thirumal in சமூகம்

புகையிரத சாரதிகள் உதவியாளர்களை பணிக்கு இணைத்து கொள்ளும் நடைமுறையில் திருத்தங்கள் மேற்கொள்ளாமைக்கு எதிர்ப்பு தெரிவித்து புகையிரத இயந்திர சாரதிகள் சங்கம் மற்றும் புகையிரத கட்டுப்பாட்டளர்கள் சங்கம் ஆகியன இணைந்து திடீர் பணி நிறுத்த போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.

இந்த போராட்டம் நேற்றைய தினம்(11) இரவு முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இதனால், புகையிரதங்களில் பயணங்களை மேற்கொள்ளும் பயணிகள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.

அந்த வகையில், மலையகத்திலும் காலை வேளையில் பயணம் செல்பவர்கள், பாடசாலை மாணவர்கள் என பெருந்திரளான பயணிகள் சிரமத்திற்குள்ளாகியுள்ளதோடு, பஸ்களில் தமது பயணங்களை மேற்கொண்டனர்.

இதேவேளை, முடிந்தவரை புகையிரத போக்குவரத்தினை முன்னெடுக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளதாக புகையிரத கட்டுப்பாட்டு அதிகாரி தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.