ஜனாதிபதியின் வருகையை முன்னிட்டு வீதிகள் தற்காலிக சீரமைப்பு

Report Print Suman Suman in சமூகம்

கிளிநொச்சி - அம்பாள்குளத்தில் கடந்த அரசினால் 111 மில்லியன் ரூபா செலவில் அமைக்கப்பட்டு நீண்ட காலமாக திறந்து வைக்கப்படாதிருந்த விசேட பொருளாதார மத்திய நிலையத்தை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன திறந்து வைக்கவுள்ளார்.

ஜனாதிபதியினால் நாளை மறுதினம்(14) உத்தியோகபூர்வமாக குறித்த நிலையம் திறந்து வைக்கப்படவுள்ளது.

இதனை முன்னிட்டு, ஜனாதிபதி செல்லுகின்ற பிரதான பாதைக்கு அருகில் பல ஆண்டுகளாக சீரமைக்கப்படாது உள்ள குறுக்கு வீதிகள் கிரவல் இடப்பட்டு தற்காலிகமாக செப்பனிடப்படுகின்றது.

கடந்த ஆட்சிக்காலங்களில் ஜனாதிபதியின் வருகையின் போது அவசர அவசரமாக வீதிகள் செப்பனிடப்படுவது போல நல்லாட்சியின் காலங்களிலும் தொடர்கின்றது என மக்கள் தெரிவிக்கின்றனர்.