போதைப் பொருள் பாவனையில் இருந்து சமுதாயத்தை மீட்போம்

Report Print Navoj in சமூகம்

“போதைப் பொருள் பாவனை மற்றும் விற்பனையில் இருந்து சமுதாயத்தை மீட்போம், சிறுவர் துஸ்பிரயோகத்தை தடுப்போம்” எனும் தொனிப் பொருளில் வாழைச்சேனையில் பல்வேறு வேலைத் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

குறித்த நிகழ்வு, இன்றைய தினம்(12) ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இதன் ஆரம்பகட்ட நிகழ்வுகள், வாழைச்சேனை அந்நூர் தேசிய பாடசாலையில் பாடசாலை அதிபர் ஏ.எம்.எம்.தாஹீர் மற்றும் ஓட்டமாவடி பிரதேச செயலகத்தின் உதவி பிரதேச செயலாளர் எஸ்.சில்மியா ஆகியோர் தலைமையில் இடம்பெற்றது.

இதன்போது, அந்நூர் தேசிய பாடசாலை மாணவர்களிடத்தில் விழிப்புணர்வும், ஓட்டமாவடி பிரதேச செயலகத்தில் செயலக ஊழியர்கள், பொது அமைப்புக்கள், பொலிஸ் உத்தியோகத்தர்கள், பள்ளிவாசல் நிருவாகத்தினருக்கான கருத்தரங்கும் நடைபெற்றது.

இந்த நிகழ்வில் வாழைச்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தனஞ்ஜய பெரமுன, பிரதேச செயலக உதவித் திட்டப் பணிப்பாளர் எச்.எம்.எம்.றுவைத், வாகரைப் பொலிஸ் நிலைய உதவிப் பொலிஸ் பரிசோதகர் ஏ.அமீர் அலி, பள்ளிவாசல் தலைவர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.