மாகாண சபைத் தேர்தலை நடத்துமாறு கோரி ஜீ.எஸ்.பீரிஸ் வழக்கு

Report Print Steephen Steephen in சமூகம்

மாகாண சபைத் தேர்தலை நடத்த தேர்தல் ஆணைக்குழுவிற்கு உத்தரவிடுமாறு கோரி ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தலைவர் ஜீ.எல்.பீரிஸ் உயர் நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மனுவொன்றை தாக்கல் செய்துள்ளார்.

குறித்த அடிப்படை உரிமை மனுவை இன்றைய தினம்(12) தாக்கல் செய்துள்ளார்.

தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மற்றும் சபாநாயகர் ஆகியோர் இந்த மனுவில் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டுள்ளனர்.

நாடாளுமன்றத்தில் அண்மையில் நிறைவேற்றப்பட்ட மாகாண சபைத் தேர்தல் திருத்தச் சட்டமூலத்திற்கு எதிராக முன்னாள் பிரதம நீதியரசர் சரத் என் சில்வா உயர் நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மனுவொன்றை தாக்கல் செய்துள்ளதுடன் கடந்த 9ஆம் திகதி பிரதம நீதியரசர் பியசாத் டெப் உட்பட மூன்று நீதியரசர்கள் முன்னிலையில் அந்த மனு ஆராயப்பட்டது.

இதேவேளை, இந்த மனுவை எதிர்வரும் 19ஆம் திகதி விசாரணைக்கு எடுப்பது என இதன்போது முடிவு செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.