லஹிரு வீரசேகர மற்றும் டெம்பிட்டியே சுகதானந்த தேரர் ஆகியோர் கைது

Report Print Steephen Steephen in சமூகம்

அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஒருங்கிணைப்பாளர் லஹிரு வீரசேகர மற்றும் அனைத்து பல்கலைக்கழக பிக்கு மாணவர் ஒன்றியத்தின் ஒருங்கிணைப்பாளர் டெம்பிட்டியே சுகதானந்த தேரர் ஆகியோர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

கடந்த 2015 ஆம் ஆண்டு மார்ச் மாதம் நடைபெற்ற மாணவர் ஆர்ப்பாட்டம் சம்பந்தமான வழக்கில் நேர்நிலையாக இன்று கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்திற்கு வந்திருந்த போதே இவர்கள் கைதுசெய்யப்பட்டனர்.

கைதுசெய்யப்பட்ட இருவரும் எதிர்வரும் 26ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை, கொழும்பு கொள்ளுப்பிட்டியில் நேற்று முன்தினம் நடந்த மாணவர்களின் சைட்டம் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் சம்பந்தமாகவும் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.