வவுனியா வர்த்தகர் சங்கம் ஹர்த்தாலுக்கு பூரண ஆதரவு

Report Print Theesan in சமூகம்

வடமாகாணத்தில் தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி இடம்பெறவுள்ள ஹர்த்தால் போராட்டத்திற்கு வவுனியா வர்த்தகர் சங்கம் தமது பூரண ஆதரவினை வழங்குவதாக அதன் தலைவர் ரி. கே. இராஜலிங்கம் தெரிவித்துள்ளார்.

வடமாகாணத்தில் நாளைய தினம்(13) இடம்பெறவுள்ள பூரண ஹர்த்தால் தொடர்பான கலந்துரையாடல் ஒன்று வவுனியா வர்த்தகர் சங்கத் தலைவர் தலைமையில் இன்று இடம்பெற்றுள்ளது.

இதன்போது, அதன் உறுப்பினர்கள் பங்கு கொண்டு, நாளை இடம்பெறவுள்ள கடையடைப்புப் போராட்டத்திற்கு பூரண ஆதரவினை வழங்குவதற்கு முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக வவுனியா வர்த்தகர் சங்கத் தலைவர் மேலும் தெரிவித்துள்ளார்.