மட்டக்களப்பில் மகிழ்ச்சியில் மக்கள்..

Report Print Kari in சமூகம்

மட்டக்களப்பில் இன்று மாலையில் இருந்து கன மழை பெய்து வருகின்றதன் காரணமாக மக்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

கடந்த காலங்களில் கடும் வெப்பம் மற்றும் வறட்சி காரணமாக விவசாயிகளும், பொது மக்களும் பெரும் அசௌகரியங்களுக்கு முகங்கொடுத்து வந்தனர்.

அத்துடன், பல பின்தங்கிய பிரதேசங்களில் குடிநீர் மற்றும் விவசாயம் தோட்ட பயிர் செய்கைகள் அனைத்தும் கைவிடப்பட்டிருந்தது.

இந்த நிலையில் தற்போது பெய்துவரும் மழை மக்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இருந்த போதிலும் சில பிரதேசங்களில் குடிநீருக்கு தட்டுப்பாடு நிலவுவதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.