அரசாங்க நிதி நிறுவனங்களின் தகவல்களை பெற உளவாளிகளுக்கு இலஞ்சம் வழங்கியது பெர்ப்பச்சுவல் நிறுவனம்

Report Print Ajith Ajith in சமூகம்

அரசாங்க நிதி நிறுவனங்களின் தகவல்களை பெற்றுக்கொள்வதற்காக பெர்பெச்சுவல் ட்ரெஸரிஸ் நிறுவனம் தமது உளவாளிகளுக்கு இலஞ்சம் வழங்கியதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

மத்திய வங்கியின் சர்ச்சைக்குரிய பிணை முறி மோசடி தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ளும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் இன்று இடம்பெற்ற விசாரணைகளின்போது இந்தத் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

பெர்பெச்சுவல் ட்ரெஸரிஸ் நிறுவனம் இலஞ்சம் வழங்கியமை தொடர்பான அறிக்கையை நிறுவனத்தின் பிரதான முகவர் அதிகாரி ஒருவர் ஜனாதிபதி ஆணைக்குழுவிடம் கையளித்துள்ளார்.

அத்துடன், அவர்களுள் சிலருக்கு பல மில்லியன் ரூபாய்கள் என்ற அடிப்படையில் பெர்பெச்சுவல் நிறுவனத்தின் சகோதர நிறுவனத்தினால் இலஞ்சம் வழங்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.