தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி கொழும்பிலும் நாளை போராட்டம்!

Report Print Rakesh in சமூகம்

உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் தமிழ் அரசியல் கைதிகளுக்கு ஆதரவாகவும், அனைத்து அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தியும் கொழும்பிலும் நாளை கவனயீர்ப்புப் போராட்டம் நடைபெறவுள்ளது.

கொழும்பு ரயில் நிலையத்துக்கு முன்னால் நாளை பிற்பகல் 3.30 மணிக்கு இந்தப் போராட்டம் இடம்பெறும் என்று அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பின் இணைப்பாளர் அருட்தந்தை மா.சக்திவேல் தெரிவித்துள்ளார்.