வடமாகாண பூரண ஹர்த்தாலுக்கு முழு ஆதரவு!

Report Print Sumi in சமூகம்

அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி வட மாகாணத்தில் முன்னெடுக்கப்படும் பூரண ஹர்த்தாலுக்கு ஈழ விடுதலை இயக்கத்தினர் தமது முழு ஆதரவினை வழங்குவதாக தெரிவித்துள்ளனர்.

தமது வழக்குகளை மீண்டும் தமிழ் பிரதேச நீதிமன்றங்களுக்கு மாற்ற வேண்டும் என்ற கோரிக்கையையும், மாற்றப்பட்ட பின்பு தமது வழக்குகளைத் துரிதமாக விசாரித்து தீர்வுகாண வேண்டும் என வலியுறுத்தியும் அநுராதபுரம் சிறைச்சாலையில் சாகும் வரையிலான உண்ணாவிரத போராட்டத்தில் அரசியல் கைதிகள் ஈடுபட்டுள்ளனர்.

அவர்களது கோரிக்கைகளை இழுத்தடிக்காது, உடனடியாக நிறைவேற்றுமாறு தாம் கோரிக்கை விடுப்பதாக ஈழ விடுதலை இயக்கத்தினர் தெரிவித்துள்ளனர்.

பல வருடங்களாக சிறைகளில் வாடும் அரசியல் கைதிகள் சிறைகளில் பல துன்பங்களை அனுபவித்து வருகின்றனர், எனவே இவர்களின் விடுதலையினை வலியுறுத்தி எம் உறவுகள் அரசியல் கட்சி பேதங்களை மறந்து ஒருமித்து குரல் கொடுக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளனர்.