துப்பாக்கி மற்றும் தோட்டாக்களுடன் முன்னாள் இராணுவ வீரர் கைது

Report Print Jeslin Jeslin in சமூகம்

துப்பாக்கியொன்றுடனும், 8 தோட்டாக்களுடனும் கல்கிஸ்ஸை, தெலவல பிரதேசத்தில் வைத்து முன்னாள் இராணுவ வீரர் ஒருவர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபரின் வீட்டின் அலுமாரியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் குறித்த துப்பாக்கி மற்றும் தோட்டாக்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கொழும்பு குற்றவியல் பிரிவிற்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலினை அடுத்து மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின்போது குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த சந்தேகநபர், இதற்கு முன்னர் மேலுமொரு துப்பாக்கியை 3 இலட்சம் ரூபாவிற்கு விற்பனை செய்துள்ளதாக தெரியவந்துள்ளது.

இந்நிலையில், கைது செய்யப்பட்டுள்ள குறித்த சந்தேக நபரை கல்கிஸ்ஸை நீதவான் நீதிமன்றில் இன்றைய தினம் முன்னிலைப்படுத்த உள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.