மீனவர் பிரச்சினை: டில்லியில் மூன்றாம் சுற்று பேச்சுவார்த்தை

Report Print Ajith Ajith in சமூகம்

மீனவர் பிரச்சினை தொடர்பான இலங்கை மற்றும் இந்திய அரசாங்கங்களுக்கு இடையிலான மூன்றாவது உயர்மட்ட பேச்சுவார்த்தை இன்று டில்லியில் இடம்பெறவுள்ளது.

இதில் இலங்கை சார்பில் கடற்தொழில் மற்றும் நீரியல்வள பாதுகாப்பு அமைச்சர் மஹிந்த அமரவீர கலந்து கொள்ளவுள்ளதுடன், இந்தியா சார்பில் விவசாய மற்றும் விவசாயிகள் நலத்துறை அமைச்சர் ராதா மோஹன் சிங் கலந்து கொள்ளவுள்ளார்.

அத்துடன், இரு நாடுகளினதும் உயர்மட்ட அதிகாரிகள் குழுவினரும் இதில் பங்கேற்க உள்ளனர்.

இலங்கையின் தடுப்பிலுள்ள தமிழக மீனவர்களையும் அவர்களின் படகுகளையும் விடுவித்தல் இதன்போது கலந்துரையாடப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

தமிழக மீனவர்களின் அத்துமீறிய மீன்பிடி நடவடிக்கைகளை கட்டுப்படுத்தவும், மீன்பிடி தொடர்பில் இரு நாடுகளுக்கிடையில் இணக்கப்பாட்டை ஏற்படுத்துவது தொடர்பிலும் கவனம் செலுத்தப்படும் எனவும் தெரியவந்துள்ளது.