முகநூல் காதலினால் உயிரை மாய்த்துக் கொள்ள முயற்சித்த இளைஞர்

Report Print Kamel Kamel in சமூகம்

முகநூலில் ஏற்பட்ட காதலினால் உயிரை மாய்த்துக் கொள்ள முயற்சித்த இளைஞர் ஒருவரை பொலிஸார் காப்பாற்றியுள்ளனர்.

மாத்தறை மஹானாம பாலத்திற்கு அருகாமையில் நில்வலா நதியில் குதித்து உயிரை மாய்த்துக்கொள்ள முயற்சித்த இளைஞரை பொலிஸ் உத்தியோகத்தர் மீட்டுள்ளார்.

பாலத்திற்கு அருகாமையில் இருந்த சிலர், திருடன் திருடன் என சத்தம் போட்டதனால் குறித்த இளைஞர் உயிரை மாய்த்துக் கொள்ள நதியில் குதித்துள்ளார்.

இந்த இளைஞர், முகநூல் ஊடாக யுவதி ஒருவருடன் காதல் தொடர்பினை ஏற்படுத்திக் கொண்டுள்ளார்.

இதனை அறிந்து கொண்ட யுவதியின் உறவினர்கள், குறித்த யுவதி அழைப்பதனைப் போன்று இளைஞரை மாத்தறைக்கு அழைத்துள்ளனர்.

யுவதியைப் போன்று அவரது உறவின பெண் ஒருவரே இந்த இளைஞரை சந்திக்க வந்துள்ளார்.

இந்த இளைஞர் நேற்று குறித்த யுவதியைத் தேடிச் சென்றுள்ளார்.

எனினும், காதலியை காணச் சென்றவருக்கு காதலியின் உறவினர்களையே சந்திக்க கிடைத்துள்ளது.

காதலியின் உறவினர்கள், குறித்த இளைஞரைப் பார்த்து இதோ திருடன் திருடன் என கூச்சலிட்டுள்ளனர்.

அப்போது அங்கு குழுமிய மக்கள் இளைஞரைத் தாக்க முயற்சித்துள்ளனர். இதனால் பதற்றமடைந்த இளைஞர் நதியில் குதிதுள்ளார்.

அதன் போது யாரோ நதியில் குதித்துவிட்டதாக மக்கள் சத்தமிட்டதனைத் தொடர்ந்து மாத்தறை பொலிஸ் நிலையத்தின் மோட்டார் போக்குவரத்துப் பிரிவின் பொறுப்பதிகாரி பீ.பீ.சுதுசிங்க மற்றும் அருகாமையில் இருந்த இளைஞர்கள் நதியில் குதித்து இளைஞரை மீட்டுள்ளனர்.

அச்சம் மற்றும் வெட்கம் காரணமாக நதியில் குதித்து உயிரை மாய்த்துக் கொள்ள முயற்சித்ததாக இளைஞர் கூறியுள்ளார்.