முற்றாக முடங்கியது யாழ்ப்பாணம்!

Report Print Thamilin Tholan in சமூகம்

அநுராதபுரம் சிறைச்சாலையில் உண்ணாவிரதம் இருக்கும் அரசியல் கைதிகளுக்கு ஆதரவு தெரிவித்தும், அவர்களது கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தியும் யாழ்ப்பாணத்தில் இன்று பூரண ஹர்த்தால் முன்னெடுக்கப்படுகின்றது.

மிகவும் அமைதியான முறையில் இந்த ஹர்த்தால் முன்னெடுக்கப்படுவதாகவும், யாழ்ப்பாணத்தில் பரபரப்பாக காணப்படும் அனைத்து இடங்களும் முடங்கி கிடப்பதாகவும் எமது செய்தியாளர் தெரிவித்தார்.

சில மருந்து கடைகளைத் தவிர வேறு எந்த கடைகளோ, வியாபார நிலையங்கள், உணவு விடுதிகள் என அனைத்தும் மூடப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

அத்துடன் இன்று பாடசாலை செல்லும் மாணவர்களும் பாடசாலைகளுக்கு செல்லவில்லை எனவும் அறியமுடிகின்றது.

மேலும், யாழ்.மத்திய பேருந்து நிலையம், திருநெல்வேலி வர்த்தக நிலையம், போன்றவையும் மக்கள் கூட்டமின்றி காணப்படுகின்றதாக தெரிவித்தார்.

இதேவேளை அரசியல் கைதிகளுக்கு ஆதரவு தெரிவித்து சுமார் 20 அமைப்புக்களும் அரசியல் கட்சிகளும் இணைந்து வடக்கில் பூரண ஹர்த்தாலுக்கு அழைப்பு விடுத்ததிருந்த நிலையில், மிகவும் அமைதியான முறையில் இந்த ஹர்த்தால் முன்னெடுக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

புகைப்படங்கள் - சுமி