விளையாட்டு மைதானத்தில் நிலைகொண்டிருந்த படையினர் வெளியேற்றம்

Report Print Mohan Mohan in சமூகம்

முல்லைத்தீவு, சுதந்திரபுரம் பகுதி பொது விளையாட்டு மைதானத்தில் நிலைகொண்டிருந்த இலங்கை படையினர் அங்கிருந்து வெளியேறி உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

2009இல் நடைபெற்ற இறுதி யுத்தத்தின் பின்னர் குறித்த பகுதியில் படையினர் நிலைகொண்டு இருந்தனர்.

இந்த நிலையில் தற்போது 9 வருடங்களின் பின்னர் அவ்விடத்தை விட்டு படையினர் முற்று முழுதாக வெளியேறியுள்ளதாக பொது மக்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும், குறித்த மைதானத்தை பொறுப்பெடுத்துள்ள விளையாட்டு கழகம் ஒன்று மைதான வளாகத்தை சீராக்கும் பணியில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.