நீதிமன்றத்திற்கு அழைத்து வந்த கைதிகள் தப்பியோட முயற்சி: அதிகாரிகள் துப்பாக்கி பிரயோகம்

Report Print Steephen Steephen in சமூகம்

கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் இன்று ஆஜர்ப்படுத்த அழைத்து வந்த இரண்டு கைதிகள் தப்பிச் செல்ல முயற்சித்துள்ளனர்.

கைதிகள் தப்பியோட முயற்சித்ததை அடுத்து சிறைச்சாலை அதிகாரிகள் துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்டு எச்சரித்துள்ளனர்.

வழக்கு விசாரணைகளுக்காக இன்று காலை சிறைச்சாலை அதிகாரிகள் கைதிகளை அழைத்து வந்துள்ளனர்.

இதன்போது, அவர்கள் தப்பிச் செல்ல முயற்சித்துள்ளதுடன், அதிகாரிகள் வானத்தை நோக்கி துப்பாக்கி பிரயோகம் செய்துள்ளனர்.

இதனையடுத்து தப்பிச் செல்ல முயற்சித்த கைதிகள் மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளனர்.