புதுகுடியிருப்பில் சட்டவிரோத மணல் அகழ்வு: மக்கள் குற்றச்சாட்டு

Report Print Mohan Mohan in சமூகம்

முல்லைத்தீவு - புதுகுடியிருப்பு பகுதியில் சட்டவிரோத மணல் அகழ்வு தொடர்ச்சியாக இடம்பெறுவதாக அந்த பகுதி மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

குறித்த பகுதியில் சட்டவிரோத மணல் அகழ்வை தடுத்து நிறுத்தும் நடவடிக்கைகள் உடனடியாக எடுக்கப்படும் என அண்மையில் வடமாகாண சபை உறுப்பினர் ஒருவர் பொது மக்களுக்கு வாக்குறுதி வழங்கியிருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

இருப்பினும் இந்த பகுதியில் தொடர்ந்தும் மணல் அகழ்வு மேற்கொள்ளப்படுவதாக பிரதேச மக்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

இவ்வாறான செயற்பாடுகள் காரணமாக புதுக்குடியிருப்பு திம்பிலிக் கிராமத்தில் இயற்கை சமநிலை பாதிக்கப்பட்டுள்ளது.

மேலும், இந்த கிராமம் வெள்ளத்தில் மூழ்கும் அபாயத்தில் உள்ளதாக இந்த பகுதி பொது மக்கள் அச்சம் வெளியிட்டுள்ளனர்.