மட்டக்களப்பில் ஹர்த்தால் இல்லை!!

Report Print Kari in சமூகம்

அனுராதபுரம் சிறைச்சாலையில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் தமிழ் அரசியல் கைதிகளின் கோரிக்கையை நிறைவேற்ற கோரி வட மாகாணம் முழுவதும் பூரண ஹர்த்தால் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் கிழக்கு மாகாணத்துக்கும் பூரண ஹர்த்தாலுக்கான அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. இருப்பினும் எந்தவித அமைப்புகளோ அல்லது சமூக ஆவலர்களோ ஹர்த்தாலை முன்னெடுக்கவில்லை என தெரிவிக்கப்படுகிறது.

இதனால் கிழக்கு மாகாணத்தில், அதிலும் குறிப்பாக மட்டக்களப்பு மாவட்டத்தில் அனைத்து நடவடிக்கைகளும் வழமை போல் நடைபெறுவதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

அத்துடன், அரச திணைக்களங்கள், வர்த்தக நிலையங்கள், பாடசாலைகள் மற்றும் அரச, தனியார் போக்குவரத்து அனைத்தும் வழமைபோல் இயங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.