முற்றாக முடங்கியது வவுனியா! அனைத்து கடைகளும் அடைப்பு

Report Print Thileepan Thileepan in சமூகம்

19 நாட்களாக அநுராதபுரம் சிறைச்சாலையில் உண்ணாவிரதம் இருக்கும் அரசியல் கைதிகளுக்கு ஆதரவு தெரிவித்தும், அவர்களது கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தியும் வடமாகாணத்தில் பூரண ஹர்த்தால் முன்னெடுக்கப்படுகின்றது.

குறித்த ஹர்த்தாலுக்கு வவுனியா வடக்கு வர்த்தகர் சங்கம் பூரண ஆதரவை வழங்கிய நிலையில் வவுனியாவில் அனைத்து கடைகளும் மூடப்பட்டுள்ளன.

இதனால், அப்பகுதி மக்கள் பெரும் அசௌகரியங்களுக்கு முகங்கொடுத்துள்ளதுடன், தனியார் பேருந்துகள் எவையும் சேவையில் ஈடுபடவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, வவுனியாவில் அரச திணைக்களங்கள் இயங்கிய போதிலும் அரச உத்தியோகத்தர்களின் வருகையும் குறைவாக காணப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

மேலதிக தகவல்கள் - சதீஸ்