கட்டுநாயக்க விமான நிலையத்தில் பெண்ணொருவர் கைது

Report Print Steephen Steephen in சமூகம்

ஒரு இலட்சம் அமெரிக்க டொலர்களுடன் இலங்கைப் பெண்ணொருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

கொழும்பு - மட்டக்குளி பிரதேசத்தை சேர்ந்த 36 வயதான இந்த பெண் இந்தியாவின், சென்னையில் இருந்து ஸ்ரீலங்கன் விமான சேவைக்கு சொந்தமான விமானத்தில் இன்று அதிகாலை 4.30 மணிக்கு கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்துள்ளார்.

இந்த நிலையிலேயே குறித்த பெண் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவரின் கைப்பையில் இருந்து ஒரு இலட்சம் அமெரிக்க டொலர்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

பறிமுதல் செய்யப்பட்ட அமெரிக்க டொலர்கள் ஒரு கோடியே 50 இலட்சம் இலங்கை ரூபா பெறுமதியுடையது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த பணத்தை சுங்க திணைக்களத்திற்கு அறிவிக்காமல் எடுத்துச் சென்ற குற்றத்திற்காகவே அவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் பணம் அரசுடமையாக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும் கைது செய்யப்பட்ட பெண் அபராதம் எதுவும் விதிக்கப்படாமல் எச்சரித்து விடுவிக்கப்பட்டுள்ளார்.